தூய ஆவியே எங்கள் தேவ ஆவியே
வாரும் ஆவியே எங்கள் தாகம் தீர்க்கவே
பாரும் தேவனே எங்கள் தேவை அறிந்து
பலமாய் எங்கள் மேல் இன்று இறங்கிடுமே(2)
1. தாவீதின் மேல் வந்திறங்கினீர்
கோலியாத்தை வெட்டி வீழ்த்தவே
சாத்தானை ஜெயித்து ஜெய கீதம் பாடி
உம்மோடு ஆடிப்பாட வந்திறங்குமே
2. சவுலின் மேல் வந்திறங்கினீர்
புதிய இதயம் கொடுக்க
கடின உள்ளம் மாற்றி
நவமான நெஞ்சம்தர
இப்போதே எங்கள் மேல் வந்திறங்குமே
3. எலிசாவின் மேல் வந்திறங்கினீர்
இரடிப்பான பெலன் கொடுக்கவே
பெலவீனம் அகற்றி புது
பெலன் பெற்றுமே சேனைக்குள்
பாய்ந்து செல்ல வந்திறங்குமே
4. யோவானின் மேல் வந்திறங்கினீர்
பரலோக காட்சி பார்க்கவே
விண்மகிமை கண்டு எம் மகிமை வெறுக்க
இந்நேரம் எங்கள் மீதில் வந்திறங்குமே
5. பவுலின் மேல் வந்திறங்கினீர்
பரதீசு அழைத்து செல்லவே
கண்ணிமை நேரத்தில் மறுரூபம் அடைந்தே
விண்ணிலே பறந்து செல்ல வந்திறங்குமே
HOME
More Songs